தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சரிவை சந்தித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட தோல்வியை தழுவியுள்ளார். சென்னையில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுமார் 15 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் வெற்றி மற்றும் வெற்றி பெரும் தருவாயில் உள்ள அமைச்சர்கள் விவரம்:-
1. திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு 4786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2. திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
3. திருமயம் தொகுதியில் எஸ் ரகுபதி வெற்றி பெற்றுள்ளார்.
4. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
5. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் இ. பெரியசாமி வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.
6. திருவண்ணாமலை தொகுதியில் எ.வெ. வேலு முன்னிலை வகிக்கிறார்.
7. குறிஞ்சிபாடி தொகுதியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னணி வகிக்கிறார்.
8. திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார்.
9. குன்னம் தொகுதியில் எஸ்.எஸ். சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளார்.
10. திருப்பத்தூர் தொகுதியில் கே. ஆர். பெரியகருப்பன் முன்னணிலை வகிக்கிறார்.
11. முதுகுளத்தூர் தொகுதியில் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார்.
12. ஒட்டன் சத்திரம் தொகுதியில் அர. சக்கரபாணி- முன்ணிலை வகிக்கிறார்.
13. துறைமுகம் தொகுதியில் பி.கே. சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார்.
13. திருவிடைமருதூர் தொகுதியில் கோவி. செழியன் வெற்றி பெற்றுள்ளார்.
14. ஆலங்குடி தொகுதியில் சிவ. வீ. மெய்யநாதன் வெற்றிபெற்றார்.
15. திட்டக்குடி சி.வி. கணேசன் முன்னிலை வகிக்கிறார்.