• Thu. Oct 1st, 2026

24×7 Live News

Apdin News

400 ரன்களைத் துரத்துவது எளிதல்ல என்பதால் சற்று அழுத்தம் இருந்தது: சுப்மன் கில்

Byadmin

Oct 1, 2026


400 ரன்களை துரத்துவது எளிதல்ல:

“சிறப்பான ஆட்டம். ஆட்டத்தின் இடைவேளையில், 400 ரன்கள் இலக்காக இருந்தபோது சற்று அழுத்தம் இருந்தது. ஆடுகளம் அல்லது மைதானம் எதுவாக இருந்தாலும், 400 ரன்களை துரத்துவது எளிதல்ல. அந்த ஆட்டத்திறன் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று ஆட்டத்திற்கு பிந்தைய நிகழ்வில் சுப்மன் கில் கூறினார்.

“ஆரம்பத்தில் ‘பவர் பிளே’ கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் 75-80 ரன்களை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று இலக்கு வைத்திருந்தோம். பந்து சற்று பழையதானதும் பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக மாறும் என்பது எங்களுக்கு தெரியும்.

25-ஆவது ஓவர் வாக்கில் நாங்கள் 200-210 ரன்களை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் 230-240 ரன்களை எடுத்திருந்தோம். அதன்பிறகு அழுத்தம் எங்கள் மீது இல்லை, அது அவர்கள் மீதுதான் இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

By admin