• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

5வது டி20: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி… தொடரை கைப்பற்றியது இந்தியா!

Byadmin

Nov 1, 2026


நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இதில் இன்று 5வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 195 ரன்கள் குவித்து போட்டியை வென்றது.

டிம் சீஃபர்ட் 93 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

நான்காவது மற்றும் 5வது போட்டியில் நியூசிலாந்து வென்றநிலையில், முதல் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்று டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.

டி20 தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 4 ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்க உள்ளது.

By admin