• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் பட்டாயா வந்தது ஏன்? அங்கு என்ன செய்கின்றனர்?

Byadmin

Sep 3, 2026


அமெரிக்க கடற்படையினரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க கடற்படையினரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்

எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன், புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது.

தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த நிறுத்தம், கப்பலில் இருந்த சுமார் 5,000 பேருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஓய்வெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பட்டாயாவில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் கேளிக்கை மையங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக, யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன் கப்பலைச் சேர்ந்த சுமார் 5,000 கடற்படையினரில் பெரும்பாலானோர் கரைக்கு வந்த முதல் சில மணி நேரங்களிலேயே ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டினர்.

ராணுவ வீரர்களைப் போன்று வெட்டப்பட்ட தலைமுடி, மீசை மற்றும் கடற்படை சீருடை டி-ஷர்ட்களுடன் அவர்கள் இருந்ததால், வழக்கமாக செருப்புகள் மற்றும் கடற்கரை உடைகளுடன் காணப்படும் பட்டாயா நகர மக்களிடையே அவர்கள் தனித்துத் தெரிந்தனர்.

நள்ளிரவு நேரத்தில், அங்கு இருந்த இளம் கடற்படை வீரர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டுதான் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற சிலர், சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ-கோ மதுபான விடுதிகளுக்குள் தயக்கத்துடன் சென்றனர். அங்கு நடனமாடிய பெண்கள் மிகக் குறைந்த ஆடைகளுடன் இருந்தனர்.

அங்கு ஒலித்துக்கொண்டிருந்த உரத்த இசைக்கு இடையே பேசுவதுகூட கடினமாக இருந்தது. தங்களுக்கு இந்த ஓய்வு உண்மையில் தேவைப்பட்டதாக வயதில் மூத்த கடற்படை வீரர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.

By admin