• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

‘6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றது செல்லும்’ – உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்

Byadmin

Oct 13, 2026


எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த போது எடுக்கப்பட்ட படம் (கோப்புப் படம்)

படக்குறிப்பு, எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த போது எடுக்கப்பட்ட படம் (கோப்புப் படம்)

‘அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆறு பேரின் ராஜிநாமாவை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது செல்லும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 13) தீர்ப்பளித்துள்ளது.

அவைத் தலைவரின் முடிவை எதிர்த்து அ.தி.மு.க சட்டப்பேரவை கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக, ‘தேவையற்ற விசாரணையை நடத்த வேண்டியதில்லை’ எனக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, ‘6 பேரின் தகுதிநீக்கம் தொடர்பாக இரண்டு மாதங்களில் பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களாக போட்டியிட்டு 47 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 25 பேர் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு ஆதரவளித்தனர். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்தனர்.

கட்சிக் கொறடா உத்தரவை மீறியதால் 25 பேரையும் தகுதிநீக்கம் செய்யுமாறு, அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அ.தி.மு.க மனு அளித்தது. இந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

By admin