• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

80 மணி நேர பிளேக், ANC சப்போர்ட் கொண்ட போட் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

Byadmin

Jul 24, 2026


ANC சப்போர்ட்:

இதில் உள்ள ஏஐ ENx தொழில்நுட்பம் மூலம் பின்னணி இரைச்சல் மற்றும் சத்தத்தை குறைக்கும். இந்த ஹெட்போனில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 மணி நேர பிளேபேக் வழங்கும், ANC இயக்கும் போது பேட்டரி பேக்கப் நேரம் 50 நேரமாக குறையும். இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 12 மணி நேர பிளேபேக் கிடைக்கும்.

போட் நிர்வானா யூடோபியா 2 மாடல் ஓவர்-இயர் மடிக்கக்கூடிய டிசைன் கொண்டுள்ளது. இந்த ஹெட்போன் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. இதில் பிளேபேக் கண்ட்ரோல், வால்யூம் அட்ஜஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ANC மோட் போன்ற அம்சங்களை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மெமரி ஃபோம் குஷன்களை கொண்டிருக்கும் இந்த ஹெட்போன் 165.6×82.7×195.6 மில்லிமீட்டர் அளவு கொண்டிருக்கிறது. இந்த ஹெட்போனுடன் கேரியிங் கேஸ், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கேபிள், AUX கேபிள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

By admin