26
ஆத்திரம் பொங்கி
அக்கிரமம் செய்ததோ?
ஆளும் நேரத்தில்
அரவணைக்க தவறியதே!
நெஞ்சுருகி மனம்
பொசுங்கிய தமிழர்
பஞ்செரிந்து கருகியதாய்
நெருப்பில் பொசுங்கினர்.
ஆடிக்கலவரம் என்று
அழகாக சொல்வார்.
அத்திவாரத்தில் சிக்கல்
அரசு மதத்தவரால்.
வஞ்சித்து கொன்று
வரலாறு மன்னிக்காத
வழக்கத்தை பழக்கமாக்கி
வாழும் இனமாக அவர்கள்.
கொழும்பில் தழிழர்
களித்திடவோ வாழ்ந்து.
வறுத்தெடுத்து பிஞ்சு
மழலைகளையும் கொன்றார்.
பெண்டிர் என்று அவர்
பண்டிதரும் மறந்தார்.
பண்பற்ற காடையராய்
பழியுண்டாக நடந்தார்.
சிறைவைத்த தமிழரை
சித்திரவதை செய்தார்.
சிரத்தில் கண்ணை
சீரழித்து வீசியெறிந்தார்.
கண்தானம் செய்வதாக
உரைத்ததைப் பழித்தார்.
விடுதலைப் போரில்
வீரியம் பெற்றிடச் செய்தார்.
இலங்கைத் தீவில்
சிங்களப் பௌத்தம்
வாழ்ந்திட மட்டுமே
முட்டிக் கொண்டார்.
இருமொழி வழி
இனம்பல வாழும்
இனியதொரு சூழலை
இல்லாது ஒழித்தார்.
நடந்ததை மறந்திடாத
மனிதராய் மண்ணில்
வாழ்ந்திட வேண்டும்.
தமிழர் நாமென நிமிர்ந்து.
குட்டக் குட்ட குனிவது
மடைமையென்று அறி.
குட்டு வாங்கி வலியில்
துடிப்பதிலும் திருப்பியடி.
வாழ்ந்திட நிலம்
வாழும்படி பணம்
வாய்த்திட ழேண்டும்.
வழமைநீ மாற்றிடு.
பசித்தால் பூசித்திட
புலியும் பார்பதில்லை.
பாவம் மானென்று
ஒருபோதும் இங்கே.
இனியொரு ஆடிக்கலவரம்
நடந்திடல் தடுத்திட
ஆக்கிட வேண்டும்
நிலையான தீர்வொன்று.
நதுநசி