ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சீனாவின் ஹான் குயின்க்சி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பரூவா 22-20, 10-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 21-17, 21-18 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் ஈஷிகா ஜெய்ஸ்வாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் இஷாராணி பருவா, பி.வி.சிந்துவுடன் மோதுகிறார்.