லண்டனில் நடைபெற்ற FIH ஹாக்கி ப்ரோ லீக் போட்டியில், இந்திய ஆண்கள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், ஆட்டம் ஷூட் அவுட்டிற்குச் சென்றது.
விறுவிறுப்பாக நடந்த ஷூட் அவுட்டில், இந்தியா இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.