• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ் அசத்தல்: கடைசி ஓவரில் 2 சிக்சர் அடித்து திரில் வெற்றி பெற்றது டெல்லி

Byadmin

Apr 18, 2026


நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 26 வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 26 ரன் விராட் கோலி 19 ரன், படிக்கல் 18 ரன் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், இங்கிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். ஸ்டப்ஸ் கடைசி வரை போராடினார். அவருக்கு டேவிட் மில்லர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டப்ஸ் 60 ரன்னும், மில்லர் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

By admin