• Tue. May 12th, 2026

24×7 Live News

Apdin News

PBKS vs DC: பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வி – பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகிறதா?

Byadmin

May 12, 2026


அக்சர் படேல் , ஐபிஎல் 2026, டெல்லி கேபிட்டல்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ், DC Vs PBKS

பட மூலாதாரம், ANI

தொடரின் முதல் ஏழு போட்டிகளில் தோல்வியே பார்க்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இறுக்கமாய் பற்றி அமர்ந்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாய் பஞ்சாப் தகுதிபெற்றுவிடும் என்றுதான் கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தார்கள். ஆனால் இரண்டு வாரங்கள் கழிந்தபின்னும் புள்ளிப்பட்டியலில் அதே 13 புள்ளிகளோடு நான்காவது இடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது அணி. பஞ்சாபை விட ஒரு புள்ளி அதிகமாக மூன்று அணிகளும் ஒரு புள்ளி குறைவாக இரண்டு அணிகளும் இருப்பதால் இப்போது ப்ளே ஆஃப் செல்வதும் அவ்வளவு எளிதான பயணமாக இருக்காது.

பஞ்சாபின் இந்த தடுமாற்றத்துக்கு மிக முக்கியக் காரணம் ஃபீல்டிங். இதுவரை 16 கேட்ச்களை விட்டிருக்கிறார்கள் பஞ்சாப் அணி வீரர்கள். அதில் ஐந்தை சஷாங் சிங் ஒருவர் மட்டுமே விட்டிருக்கிறார். இந்தத் தொடரில் அதிக கேட்ச்கள் விட்ட அணிகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது பஞ்சாப்.

 ஐபிஎல் 2026, டெல்லி கேபிட்டல்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ், DC Vs PBKS

பட மூலாதாரம், ANI

மறுபக்கம், உலகத்தர பேட்ஸ்மேன்கள், இந்தியாவின் சிறந்த இரண்டு ஸ்பின்னர்கள், சர்வதேச அளவில் கலக்கும் பவுலர்கள் என எல்லாமும் இருந்தும் ஆடிய 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட தவறவிடக் கூடிய நிலையில் இருந்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டி நேற்று (மே 11) தரம்சாலாவில் நடந்தது.

தரம்சாலாவில் 2023-லிருந்து நடந்திருக்கும் ஐந்து ஐ.பி.எல் போட்டிகளில் நான்கில் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது. எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், டெல்லி கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

அந்த அணியில் பொரெல், மில்லர், நபி, மாதவ் திவாரி, சஹில் பராக் என ஐந்து வீரர்கள் இந்தப் போட்டிக்காக உள்ளே வந்திருந்தார்கள். பஞ்சாப் அணியில் பெர்குசனுக்கு பதிலாக பென் ட்வார்ஷுயிஸ் பஞ்சாப் அணிக்காக தன் முதல் போட்டியில் களம் கண்டார்.

By admin