மேலும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், இந்த ஆண்டு ஜனவரியில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முந்தைய பயணம் குறித்தும் நினைவு கூர்ந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி பாராட்டினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனின் மதிப்புமிக்க “ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்” விருது வழங்கப்பட்டது. இது ஸ்வீடன் நாடு ஒரு வெளிநாட்டு அரசாங்க தலைவருக்கு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகும். பிரதமரின் ஸ்வீடன் பயணத்தின் போது வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருது, இந்தியப் பிரதமர் ஒரு வெளிநாட்டிலிருந்து பெறும் 31வது சர்வதேச கௌரவமாகும்.