• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

PSTA சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திக்கக் காத்திருக்கும் சர்வஜன நீதி அமைப்பு

Byadmin

Nov 25, 2026


பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தொடர்ந்தும் காத்திருப்பதாக சர்வஜன நீதி அமைப்பு அறிவித்துள்ளதோடு துறைசார் மேற்பார்வைக்குழுவில் சட்டமூலம் சம்பந்தமான கவலைகளை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் சம்பந்தமாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்காக நவம்பர் 23ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்திற்கு, நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் எமது அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனை ஏற்று நாம் நேற்றைய (நேற்று முன்தினம்) நடைபெற்ற கூட்டத்தில் நாம் பங்கேற்று, குறித்த சட்டமூலம், பின்பற்றப்பட்ட நடைமுறை மற்றும் அதனை இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை விடவும் மிகவும் அடக்குமுறையான சட்டமாக மாற்றும் பல கடுமையான பிரிவுகள் தொடர்பான எமது கவலைகளை முன்வைத்தோம்.

தொடக்கத்திலேயே நாம் குறிப்பிடுவது என்னவென்றால், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காகவே இந்த பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி  எமது அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன், மிக அண்மையில பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தது. இன்று குழுவில் நாம் சுட்டிக்காட்டியபடி, தற்போதைய நிலையில் பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நடைமுறைப்படுத்த முடியாததாக உள்ளதுடன், அது நிச்சயம் மீளப் பெறப்பட வேண்டும்.

மேலும், பயங்கரவாதத்திடமிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாகக் கலந்தாலோசனை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்திருந்த கூற்றை ஏற்று, இது குறித்துப் பேசுவதற்காக அவரைச் சந்திக்குமாறுகோரி நாம் நவம்பர் 9ஆம் திகதி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.

அந்தக் கடிதத்திற்கு அரசாங்கத்திடமிருந்து எந்தப்பதிலும் கிடைக்காத போதிலும், சந்திப்புக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி நவம்பர் 19ஆம் திகதியிடப்பட்ட மற்றுமொரு கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலந்தாலோசனைகளை நடத்துவதாக ஜனாதிபதி தாமே அளித்த வாக்குறுதிக்கான பதிலுக்காக நாம் தொடர்ந்து காத்திருக்கிறோம் என்றுள்ளது.

By admin