நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.
2018 ஆம் ஆண்டு ‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ மூலம் பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இதனையடுத்து அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் ‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ தயாரிப்பில் புதிய படம் ஒன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி அவரது பெயரிலையே சிலர் மோசடி செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக வாட்ஸப் மெசேஜ்களை சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள ‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்யப்படுவது இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜென்ட்களோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை.
எஸ்கே புரொடக் ஷன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் வெளியிடப்படும். இது தொடர்பாக வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம்.
‘சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்’ பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.