• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஸ்டாமர் பதவி விலக வேண்டும் – தொழிற்கட்சி எம்.பி அழைப்பு!

Byadmin

May 9, 2026


தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் கட்சி எம்.பி. ஜொனாதன் பிராஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹார்ட்லிபூலில் (Hartlepool) தொழிலாளர் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து பிராஷின் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் ஹார்ட்லிபூலுக்கும் தொழிலாளர் கட்சிக்கும் ‘மோசமானவை’ மற்றும் ‘பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை’ என்று அவர் விவரித்தார்.

ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை நிர்ணயித்து, பரந்த அளவிலான தலைமைத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அந்த எம்.பி. வலியுறுத்தினார்.

தொழிலாளர் கட்சி ‘மிகவும் கோழைத்தனமாக’ இருப்பதாக குறிப்பிட்ட அவர் , நாட்டை மாற்றுவதற்கு புதிய, துணிச்சலான தலைமை அவசியம் என்றும் கூறினார்.

By admin