ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும்.
கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப் பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.