• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

குறைவாக மட்டுமல்ல அதிகமாக தூங்கினாலும் என்ன ஆபத்து? எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை அறியும் எளிய வழி என்ன?

Byadmin

Sep 20, 2026


குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால் உங்கள் உடல் சீக்கிரம் முதுமையடையுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ தூங்கும் நபர்களிடம் முதுமையின் அறிகுறிகள் முன்கூட்டியே தென்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பொதுவாக, 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால் ஒருவர் இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால், அது அவரது உடல்நலத்தையும் உடலின் முதுமை அடையும் செயல்முறையையும் பாதிக்கக்கூடும்.

நேச்சர் இதழில் வெளியான ஆய்வில், மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்குபவர்களிடம் முதுமைக்கான அறிகுறிகள் முன்கூட்டியே தென்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினி நரம்பியல் விஞ்ஞானி ஜென்ஹாவ் வென் மற்றும் அவரது குழுவினர், பிரிட்டனின் பயோபேங்க்கில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் பேரின் உடல்நலத் தரவுகளை ஆய்வு செய்தனர்.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்கியவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கியவர்களிடம் முதுமைக்கான அறிகுறிகள் அதிகமாகக் காணப்பட்டன.

எனினும், ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது நேரடியாக உடல்நலத்தை மேம்படுத்துகிறது அல்லது முதுமை அடையும் செயல்முறையைத் தாமதப்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை.

By admin