மப்ளர் கதை
பிரதமர் மோடி தனது உரையில், தான் அரசியலுக்கு வராத கால கட்டத்தில், அதாவது பொதுவாழ்வில் யாரும் அறியாத ஒரு நபராக 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திற்கு முதன்முறையாக வந்திருந்ததாக குறிப்பிட்டார்.
அந்தப் பயணத்தின் போது உள்ளூர் நியூசிலாந்து நபர் ஒருவர் தனக்கு ஒரு மப்ளர், ஒரு தொப்பி மற்றும் ஒரு ஜோடி கையுறைகளை அன்பளிப்பாக வழங்கியதாக கூறினார்.
மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே, தனது கழுத்தில் இருந்த மப்ளரைக் கழற்றிப் பொதுமக்களிடம் காட்டிய பிரதமர் மோடி, “இப்போது எனது கழுத்தில் இருக்கும் இந்த மப்ளர்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நியூசிலாந்து நண்பர் எனக்குக் கொடுத்தது.
இத்தனை ஆண்டுகளாக இதனை நான் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். உங்கள் அன்பை நான் எப்படி என் நெஞ்சில் சுமக்கிறேனோ, அதேபோல இந்த நினைவையும் பாதுகாத்து வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மக்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பி நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.