• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

எஸ். ஜானகியின் இசைப் பயணம் எப்படி தொடங்கியது? தமிழில் அவர் பாடிய முதல் பாடல் என்ன?

Byadmin

Jul 12, 2026


எஸ். ஜானகியின் இசைப் பயணம் எப்படி தொடங்கியது? தமிழில் அவர் பாடிய முதல் பாடல் என்ன?

பட மூலாதாரம், FB/Janaki

    • எழுதியவர், டாக்டர். ரொம்பிசர்லா பார்கவி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திரையிசைப் பாடகி எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்ததாக, சமூக ஊடக பதிவில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் 1938ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒன்பது வயதில் முதல் மேடை நிகழ்ச்சியில் பாடினார்.

(இந்த நிலையில், எஸ். ஜானகியின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2024 ஏப்ரலில் வெளியிடப்பட்ட அவர் குறித்த இந்தக் கட்டுரை தற்போது மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

நீல வானில், அலைகளில் மிதந்து வரும் காற்றில் அவரது குரல் தாங்கி வரும் பாடலை கேட்கும்போது எனது கவலைகள் மறந்து இதயம் பஞ்சாய் மாறிவிடுகிறது.

அவர் குரலில் பாடிய ‘மேகமா தேகமா’ என்ற பாடலை கேட்கும் போதெல்லாம், உடலுக்குள் மென்சோகம் பரவி மனம் கனக்கிறது.

By admin