• Thu. Jul 2nd, 2026

24×7 Live News

Apdin News

Wimbledon Tennis: ரஷிய முன்னணி வீராங்கனை ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி

Byadmin

Jul 2, 2026


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மிர்ரா ஆண்ட்ரீவா முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கிரெஜ்சிகோவா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மிர்ரா ஆண்ட்ரீவா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

நாளை நடைபெறும் மூன்றாவது சுற்றில் கிரெஜ்சிகோவா, சக நாட்டு வீராங்கனையான நிகோலா பர்டுன்கோவாவை சந்திக்கிறார்.

By admin