நடிகர் – அறிமுகத்தின் போதே வெறுக்கப்பட்ட நடிகர் – பாராட்டப்பட்ட நடிகர்- வசூல் நடிகர் – வேற்று மொழி படங்களில் நடித்த நடிகர் – கோலிவுட் மூலம் ஹொலிவுட்டில் தடம் பதித்த நடிகர் – தற்போது சர்ச்சைக்குரிய நடிகர்- என திரையுலகினரால் விதவிதமாக விமர்சிக்கப்படும் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் – திரை உலக பிரபலங்கள் – ரசிகர்கள் – என பலரும் பங்கு பற்றி இருந்தனர். இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் தனுஷ் பேசுகையில், ” எம்முடைய பால்ய பிராயத்தில் கிராமத்தில் வசிக்கும் போது அங்கு இட்லி சுட்டு விற்பனை செய்யும்…