• Mon. Sep 21st, 2026

24×7 Live News

Apdin News

ஃபிட்ஸ்ராய்: இந்த ஒலிம்பிக் நதியில் 500 முதலைகள் இருப்பதை விட பெரிய கவலை என்ன?

Byadmin

Sep 21, 2026


ஃபிட்ஸ்ராய் நதி குயின்ஸ்லாந்தின் ராக்ஹாம்ப்டன் நகரத்தின் வழியாக ஓடுகிறது.

பட மூலாதாரம், Rockhampton Regional Council

    • எழுதியவர், சைமன் அட்கின்சன்
    • பதவி, குயின்ஸ்லாந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பள்ளிகளுக்கான படகோட்டப் போட்டி (ரோயிங் ரெகாட்டா) பொதுவாக அதிக கவனத்தை ஈர்க்காது.

ஆனால் இந்த வார இறுதியில், மாகாணத்தின் மிகவும் திறமையான 600-க்கும் மேற்பட்ட படகோட்ட வீரர்கள், ராக்ஹாம்ப்டன் நகரின் முதலைகள் வாழும் ஃபிட்ஸ்ராய் நதியில் போட்டியிடுகின்றனர்.

“இதற்கு முன்பு எப்போதும் எந்த ஊடகமும் இங்கு வர விரும்பியதில்லை,” என்று ரோயிங் குயின்ஸ்லாந்தின் தலைவர் ஆன்தியா ஓ’லாஃப்லின் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் இந்த ஆண்டு நிலைமையே வேறுபட்டது. இன்னும் ஆறு ஆண்டுகளில் நடைபெறவுள்ள 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் மற்றும் கேனோ ஸ்பிரிண்ட் போட்டிகள் நடைபெறவிருக்கும் இடமாக இந்த நதிப் பகுதி தேர்வாகியுள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பானதும் போட்டிக்குத் தகுதியானதுமான இடம் என தொழில்நுட்ப மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நதியில் உவர்நீர் முதலைகளை காண்பது அரிதல்ல. அவற்றின் எண்ணிக்கை சுமார் 500 ஆகவும், அவை நான்கு மீட்டர் (13 அடி) வரை வளரக்கூடியவையாகவும் உள்ளன. எனினும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான மாகாண அரசின் பதிவுகளின்படி, இந்தப் பகுதியில் முதலைகள் மனிதர்களைத் தாக்கிய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.

By admin