4
‘தேவரா ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜூனியர் என்டிஆர் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் – அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘கே ஜி எஃப் ‘படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி பான் இந்திய நட்சத்திர இயக்குநராக உயர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
புராண இதிகாச காலத்து கதை கள பின்னணியில் ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என் டி ஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் தருணத்தில் படத்தைப் பற்றிய புதிய தகவலை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் படத்தின் நாயகனான ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாள் எதிர்வரும் மே மாதம் இருபதாம் திகதி என்பதால்… அன்றைய திகதியில் இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்படும் என்றும், மேலும் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபாஸ், அல்லு அர்ஜுன் ஆகியோரின் வரிசையில் பான் இந்திய நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்காக ஜூனியர் என்டிஆர் கடும் முயற்சி மேற்கொண்டு இருக்கிறார் என்றும், அதன் அதில் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பது அடுத்த ஆண்டு மே மாதம் தெரியவரும் என்றும் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.