• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

அனில் மேனன்: கேரள வேர்கள், நாசா விண்வெளி வீரர் – 8 மாதங்களுக்கு விண்வெளிக்குச் செல்லும் இவர் யார்?

Byadmin

Jul 14, 2026


அனில் மேனன், விண்வெளிக்கு, இந்திய வம்சாவளி மருத்துவர், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனில் மேனன்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி, ஆகியோரைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் நாசா விண்வெளி வீரருமான அனில் மேனன் இன்று (ஜூலை 14) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவுள்ளார். அவர் 8 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

யார் இந்த அனில் மேனன்? அவர் விண்வெளியில் மேற்கொள்ளவுள்ள பணிகள் என்ன?

ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 (Soyuz MS-29) விண்கலம் இந்திய நேரப்படி இன்று இரவு 8:17 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். இதில் நாசாவின் அனில் மேனனோடு இணைந்து, ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸின் பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினாவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கின்றனர்.

இந்திய மற்றும் யுக்ரேனிய பெற்றோருக்கு அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் 1976, அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தவர் அனில் மேனன்.

“அனில் மேனனின் தந்தை சங்கரன் மேனன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். அவர் தனது படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தார்” என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன்.

By admin