• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

Byadmin

Sep 22, 2026


சவூதி அரேபியாவில் தண்டனை அனுபவித்து வரும் சிவராசா அனோஜன் வழக்கை கருணை அடிப்படையில் பரிசீலித்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத்திடம் கோரிக்கை விடுக்கும் வகையில் மனுவொன்றை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனோஜனின் விடுதலையை வலியுறுத்திய  மனுவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), தேசிய ஷூரா சபை மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவராசா அனோஜன் அவர்களின் வழக்கில் தங்களது ஆதரவை வழங்குவதுடன், இலங்கையில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகம் ஊடாக சவூதி அரேபிய மன்னரிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்து, அனோஜன் அவர்களின் வழக்கை கருணையுடன் பரிசீலிக்குமாறும் குறித்த அமைப்புகளிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிவராசா அனோஜன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.

By admin