• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

அபிஷன் ஜீவந்த் நடிக்கும் ‘பிகாசோ’ படத்தின் அப்டேட்

Byadmin

Nov 29, 2026


‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிர்வை ஏற்படுத்தி, இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் அபிஷன் ஜீவந்த் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பிகாசோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற :ஹகுன மட்டாடா..’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகாசோ’ திரைப்படத்தில் டொக்டர் சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவந்த், ஷிவானி நகரம், யோகலட்சுமி, ‘கானா’ வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிராமா கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ . பாலமுருகன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரிச் ரிச்சா மாட்டணும் .. லட்சம் கோடி ஆகணும்’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் தமிழ் ஆதவன் எழுத, பின்னணி பாடகரும், நடிகருமான அபிஷன் ஜீவந்த் பாடியிருக்கிறார். துள்ளலான நடனத்துடன் கூடிய இந்த பாடல் இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.‌

The post அபிஷன் ஜீவந்த் நடிக்கும் ‘பிகாசோ’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.

By admin