• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

நவம்பர் இறுதியில் இங்கிலாந்தில் கனமழை எச்சரிக்கை! சில பகுதிகளில் வறட்சி தொடரும் அபாயம்!

Byadmin

Nov 29, 2026


நவம்பர் மாதம் நிறைவடையும் நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்கு திங்கட்கிழமை (30) முதல் செவ்வாய்க்கிழமை (01) வரை மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகளை இங்கிலாந்து வானிலை ஆய்வு மையமான Met Office வெளியிட்டுள்ளது.

இலையுதிர் காலம் முழுவதும் போதிய மழை பெய்யாததால் இங்கிலாந்தின் பல பகுதிகள் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த கோடைகாலத்தில் தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஏறக்குறைய 2 மாதங்களாக அளவிடக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகவில்லை.

மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கனமழை

இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மேற்குப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திங்கட்கிழமை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் தென்மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்றினால் வெப்பநிலை பருவகால சராசரியை விட அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் மேற்குப் பகுதிகளில் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி முதல் செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை மஞ்சள் நிற கனமழை எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

இந்தப் பகுதிகளில் பொதுவாக 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், மேற்கு ஹைலண்ட்ஸ் மற்றும் டம்ஃப்ரீஸ் அன்ட் காலோவே (Dumfries and Galloway) பகுதிகளில் 70 முதல் 90 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் - ஈரான்

By admin