• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

கடல் அரிப்பால் 1,974 ஹெக்டேர் நிலத்தை இழந்த தமிழ்நாடு – அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை?

Byadmin

Nov 29, 2026


கடல் அரிப்பு: 30 ஆண்டுகளில் 1,974 ஹெக்டேர் நிலத்தை இழந்த தமிழ்நாடு – அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை?

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் 39.23% கடற்கரையோர பகுதிகள் கடந்த 30 ஆண்டுகளில் 1,974 ஹெக்டேர் நிலப்பரப்பை கடல் அரிப்புக்கு இழந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரிக்கும் வங்கக் கடலுக்கும் இடையே அமைந்துள்ள மீனவ கிராமங்களில் ஒன்று கோரைக்குப்பம். கடல் அரிப்பால் இந்தப் பகுதியில் கடற்கரை நிலப்பரப்பு சுருங்கி வருவது அங்குள்ள மீனவ மக்களின் குடியிருப்புகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஆனால், கோரைக்குப்பம் மக்களின் பிரச்னை கடல் அரிப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை. பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மறுகுடியமர்வுத் திட்டமே அவர்களது வாழ்வாதாரத்திற்கு மற்றொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோரைக்குப்பம் மீனவ மக்களுக்காகத் தாங்கல் பெரும்புலம் பகுதியில் 2007ஆம் ஆண்டு 101 குடியிருப்புகள் கட்டப்பட்டன. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் வீடுகளுடன் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், அந்த வீடுகளில் குடியேற மீனவ மக்கள் மறுத்துவிட்டனர்.

புதிய குடியிருப்புகளில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குச் செல்ல சுமார் 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், அது தங்களது தொழிலுக்கும் வருமானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கோரைக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin