• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி – என்ன நடந்தது?

Byadmin

Nov 2, 2026


ஃபுளோரிடா விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் தீப்பற்றி எரியும் பள்ளம்.

படக்குறிப்பு, ஃபுளோரிடா விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் தீப்பற்றி எரியும் பள்ளம்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான மார்-அ-லாகோ விடுதியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள க்ரெஸ்ட்ஹேவன் பகுதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களில், குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அங்கு கான்கிரீட் துண்டுகள் மற்றும் லியர்ஜெட் 60 ரக விமானத்தின் சிதைவுகளும் சிதறிக் கிடந்தன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஊடகங்களின் செய்திகள் மற்றும் விமானப் பயணத் தரவுகளின் ஆய்வுகளின்படி, விபத்துக்கு முன்பு அந்த விமானம் நொடிக்கு நூற்றுக்கணக்கான அடி வேகத்தில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.



By admin