• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

ரஞ்சி டிராபியில் 9 விக்கெட்டுகள் வீத்திய ஷர்ஸ் துபே

Byadmin

Nov 2, 2026


ரஞ்சி டிராபியின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. நாக்பூரில் நடைபெறும் போட்டியில் மத்திய பிரதேசம்- விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

ஹர்ஷ் துபே 9 விக்கெட்

யாஷ் துபே மற்றும் ஷக்ஷம் புரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். யாஷ் துபே 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களை ஹர்ஷ் துபே தொடர்ச்சியாக வெளியேற்றினார். அதர்வா மஹாஜன் 85 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மத்திய பிரதேசம் 209 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

ஹர்ஷ் துபே 23.1 ஓவரில் வீசி 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் விக்கெட்டை மட்டும் சக பந்து வீச்சாளர் நிக்கிகெட் புதே வீழ்த்தவில்லை என்றால் ஹர்ஷ் துபே 10 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு இருந்திருக்கும்.

மகாராஷ்டிராவுக்கு எதிராக பெங்கால் 143 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ராஜஸ்தான் 78 ரன்களில் சுருண்டது.

சண்டிகருக்கு எதிராக தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது.

By admin