• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஒருவரின் இதயத்துடிப்பு நின்றுவிட்டால் சிபிஆர் எவ்வளவு நேரம் கொடுக்கலாம்? 8 முக்கிய விஷயங்கள்

Byadmin

Nov 2, 2026


இதயம், சிபிஆர்

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஒருவரின் இதயத்துடிப்பு திடீரென நின்றுவிட்டால், எத்தனை நிமிடங்கள் வரை உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்? 5 நிமிடங்களா? 10 நிமிடங்களா? அரை மணி நேரமா? சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் முதலுதவிக்கு ஏதேனும் நேர வரம்பு இருக்கிறதா?

2012-ஆம் ஆண்டு 23 வயது ஃபேரிஸ் முவாம்பா என்ற போல்டன் கால்பந்து வீரர், போட்டியின்போது மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியது. சுமார் 78 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் மற்றும் மருத்துவ மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அவர் உயிர் பிழைத்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், ஐரோப்பிய உயிர்ப்பிப்பு கவுன்சில் மற்றும் இந்திய சுகாதார அமைப்புகள் வலியுறுத்துவது என்னவென்றால், சிபிஆருக்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட “நேர வரம்பு” இல்லை.

1. சிபிஆர் என்றால் என்ன?

சிபிஆர் என்பது Cardiopulmonary Resuscitation என்பதன் சுருக்கம். இதயம் துடிப்பதை நிறுத்தியபோது அல்லது சுவாசம் நின்றபோது, மார்பின் நடுப்பகுதியில் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்து, மூளை மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு குறைந்தபட்ச ரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜனையும் வழங்கும் அவசரகால உயிர்காக்கும் முறை.



By admin