• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா படையெடுத்தால் அதை எதிர்கொள்ள கனடா எவ்வாறு தயாராகிறது?

Byadmin

Oct 4, 2026


கனடா, அமெரிக்கா, போர், ராணுவ ஒத்திகை

    • எழுதியவர், நதீன் யூசிஃப்

    • எழுதியவர், ராபின் லெவின்சன்-கிங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்கப் படையெடுப்பு போன்ற கற்பனை செய்து பார்க்கவே கடினமான ஒரு சூழலுக்கும் தான் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த வாரம் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் நிலையில், அமெரிக்கா–கனடா இடையிலான உறவு மறுவரையறை செய்யப்பட்டு வருவதால், அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழிடம் அவர் கூறினார். அதேவேளை, அமெரிக்கா கனடா மீது படையெடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், அத்தகைய சூழல் ஏற்படுவது அசாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இது வெறும் ஆபத்து மேலாண்மை மட்டுமே” என்று கார்னி கூறினார்.

டிரம்பின் உலகளாவிய வரி விதிப்புகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அவரது விருப்பம் குறித்து அவர் அடிக்கடி வெளியிடும் கருத்துகள் ஆகியவை, அமெரிக்காவிடம் இருந்து சாத்தியமான தாக்குதலை எதிர்கொள்வதற்காக கனடா தனது பாதுகாப்புத் தயார்நிலையை அதிகரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளன.

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா படைபலத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக, தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக கனடா மீது பொருளாதார அழுத்தத்தைத் தொடர்ந்து செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin