• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் பிரதமர் மோடி போனில் உரையாடல்.. 4வது குழந்தை பெற்றதற்கு வாழ்த்து

Byadmin

Aug 9, 2026


அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

நேற்று ஜேடி வான்ஸ் அழைப்பை அட்டென்ட் செய்து பேசிய பிரதமர் மோடி, முக்கிய துறைகளில் இந்தியா – அமெரிக்கா இடையிலான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜே.டி. வேன்ஸ் மற்றும் உஷா வேன்ஸ் தம்பதியருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் மோடி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தம்பதியருக்கு அண்மையில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘அலெக் நீல் வேன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

By admin