• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

அயோத்தி ராமர் கோயிலின் முதல் சிஇஓ யார்? ‘ஆபரேஷன் சிந்தூரில்’ முக்கிய பங்கு வகித்த விமானப்படை தளபதியின் பின்னணி

Byadmin

Sep 2, 2026


காணிக்கை திருட்டு விவகாரத்தைத் தொடர்ந்து, முழுநேர தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்க ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிதேந்திர மிஸ்ரா

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, அக்கோவிலின் அறக்கட்டளை முதல்முறையாக தலைமைச் செயல் அதிகாரியை நியமித்துள்ளது.

இந்தப் பதவிக்கு முன்னாள் விமானப்படை ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. மே மாதம் வரை இந்திய விமானப்படையின் மேற்கு விமானக் கட்டளை மையத்தின் தளபதியாகப் பணியாற்றிய அவர், பின்னர் ஓய்வு பெற்றார்.

அறக்கட்டளை கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதன் இடைக்கால பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகன் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் ராணுவ மோதல் ஏற்பட்டபோது, ஜிதேந்திர மிஸ்ரா விமானப்படையின் மேற்கு விமானக் கட்டளை மையத்தின் தளபதியாக இருந்தார்.

அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் மேலும் மூன்று புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அயோத்தியைச் சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டெல்லியைச் சேர்ந்த மகேஷ் பக்சந்த்கா மற்றும் ஷிகோஹாபாத்தைச் சேர்ந்த நிர்மலா யாதவ் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

By admin