• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய தமிழர்களை தேடி பல நாடுகளில் இருந்து திரண்ட உறவுகள், தொழில்நுட்ப உதவியுடன் தேடல்

Byadmin

Sep 2, 2026


நேபாள் பெருவெள்ளம்
படக்குறிப்பு, கணேஷ்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ், நேபாளத்தில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆன்மீக சுற்றுலாவாக நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை அவர்களின் உறவினர்கள் பன்னாட்டுக் குழு அமைத்து தேடிவருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களும், தகவல் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஒரே குழுவாக நேபாளம் வந்திருந்தனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அவர்கள் சிக்கினர். அந்தக் குழுவில் வந்திருந்த யாரையும் தற்போது தொடர்பு கொள்ள இயலவில்லை.

தற்போது அவர்களை தேடி, இந்தியாவிலும், துபை, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் அவர்களது உறவுகள் நேபாள தலைநகர் காத்மண்டுவில் முகாமிட்டு தேடல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டிப்பாக தங்கள் உறவுகளை மீட்டுக் கொண்டு போவோம் என்று கூறும் அவர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமல்ல, நவீன தொழில்நுட்ப உத்திகளும் கை கொடுக்கின்றன.



நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய தமிழர்களை தேடி

பட மூலாதாரம், Getty Images

முக அடையாள மென்பொருள் கொண்டு தேடல்

நேபாளத்தில் களத்தில் ஒரு குழுவாக வந்துள்ள தங்களுக்கு உதவியாக ஆன்லைனில் ஒரு குழு இயங்குவதாக கணேஷ் கூறுகிறார்.

By admin