மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது குறித்து மத்திய அரசின் புள்ளி விவரங்களை தமிழக அரசு எச்சரிக்கை மணியாக எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: ஆசிரியர்கள், கட்டமைப்பை பெருக்காமல் அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 1.15 லட்சம் குறைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2.07 லட்சம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.