ஐபிஎல் தொடரின் 59-வது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சென்னை அணி முதலில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தினார் ஆகாஷ் சிங். அடுத்து சஞ்சு சாம்சன், உர்வில் படேல் என முன்னணி வீரர்களை வெளியேற்றினார்.
ஆகாஷ் சிங் 4 ஓவரில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தி சி.எஸ்.கே. அணிக்கு நெருக்கடி தந்தார். ஆகாஷ் சிங் லக்னோ அணிக்காக களமிறங்கிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.