• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி எதிர்ப்பு ஏன்?

Byadmin

Aug 28, 2026


மம்தானி- மோகன் பகவத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியிடம், மோகன் பகவத்தின் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு பல குழுக்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்குத் தாம் ஆதரவு அளிக்கவில்லை எனக் லடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றவுள்ளார். எனினும், தனியார் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள இதை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று ஜோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. மோகன் பகவத் 25ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உலகளாவிய தொடர்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.

நியூயார்க்கில் தங்கியிருக்கும் அவர், “யுனிவர்சல் ஒன்நெஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். மேலும், சனிக்கிழமை பிரபலமான மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 பேர் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

“இந்தப் பேரணிக்கு நான் ஆதரவளிக்கவில்லை. ஆனால், ஒரு தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்யும் அதிகாரம் நகர நிர்வாகத்திற்கு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மம்தானி கூறினார்.

By admin