23
இங்கிலாந்தில் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச பஸ் பயணத் திட்டம், நேற்று (01) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சிறப்பு திட்டம், ஆகஸ்ட் மாதம் முழுவதும் அமலில் இருக்கும். இதன்படி, தகுதியான குழந்தைகள் நாட்டின் பெரும்பாலான உள்ளூர் பஸ் சேவைகளில் கட்டணமின்றிப் பயணிக்க முடியும்.
கோடை விடுமுறை காலத்தில் குடும்பங்களின் பயணச் செலவைக் குறைத்து, வாழ்க்கைச் செலவு அழுத்தத்தை தணிக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் தெரிவிக்கையில், இந்த முயற்சி குடும்பங்களின் நிதிச் சுமையை குறைத்து, குழந்தைகள் கோடை விடுமுறையை சுதந்திரமாக அனுபவிக்க உதவும் என்றார்.
அதேவேளை, ‘கிரேட் பிரிட்டிஷ் சம்மர் சேவிங்ஸ்’ (Great British Summer Savings) என்ற புதிய திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான உணவுகள், நாடக மற்றும் சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட குடும்ப பொழுதுபோக்கு சேவைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மூலம் குடும்பங்களின் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.