• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

தேவி ஸ்ரீபிரசாத் – விவேகா இருவரும் தந்த 10 பிரபல பாடல்கள் எவை?

Byadmin

Aug 2, 2026


இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடலாசிரியர் விவேகா

பட மூலாதாரம், VIVEKA

விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவிஸ்ரீபிரசாத், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவர் இருந்துள்ளார்.

சென்னையில் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இசைப்பள்ளியில் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மற்றும் பாட்டு கற்றார். சினிமா, இசைக்குடும்பத்தில் வளர்ந்ததால் சின்ன வயதிலேயே அவருக்குள் இசையமைப்பாளராகும் ஆசையும் சேர்ந்தே வளர்ந்தது.

1997-ஆம் ஆண்டு வெளியான டான்ஸ் பார்ட்டி என்ற ஆல்பத்துக்கு 17 வயதில் இசையமைத்தார். 1999-ஆம் ஆண்டு வந்த தேவி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளரானார். 2001-ஆம் ஆண்டு வந்த ஆனந்தம் என்ற தெலுங்கு படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடலாசிரியர் விவேகா

பட மூலாதாரம், X/ThisisDSP

புஷ்பா படத்துக்காக தேசிய விருது

தமிழில் தேவி ஸ்ரீ பிரசாத் தசாவதாரம், சிங்கம், சம்திங் சம்திங், வில்லு, கங்குவா, மழை, திருப்பாச்சி, சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தென்னிந்தியாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். புஷ்பா படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ளார். இப்போது எல்லம்மா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு இன்று பிறந்தநாள்

By admin