• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? விதிகள் கூறுவது என்ன?

Byadmin

Nov 5, 2026


அதிபர் டிரம்ப்

படக்குறிப்பு, அதிபர் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த இடைக்காலத் தேர்தல் ஆண்டை குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துத் தொடங்கினார்.

ஜனவரி 6ஆம் தேதி, பிரதிநிதிகள் சபையிலுள்ள குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டிரம்ப், “நீங்கள் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நாம் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், என்னை பதவியில் இருந்து நீக்குவதற்காக அவர்கள் பதவி நீக்க தீர்மானத்தின் மூலம் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்” என்று கூறினார்.

தற்போது, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது.

டெக்சாஸ், தெற்கு கரோலினா, கன்சாஸ் போன்ற பாரம்பரியமாக குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த மாகாணங்களில்கூட செனட் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், இதற்கு முன்பே ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்க நாடாளுமன்றம், டிரம்புக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தது. ஆனாலும், அவரை அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதைத் தடுக்க முடியவில்லை.

தேர்தலுக்கு முன்பு, செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் இருந்தனர். மொத்தமுள்ள 435 பிரதிநிதிகள் சபை இடங்களில் 367 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



By admin