• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

இடைத்தேர்தல்: தாராபுரத்தில் 5 முனைப் போட்டி – மக்கள் கூறுவது என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Oct 2, 2026


தாராபுரம் தொகுதியெங்கும் பலவிதமான பிரச்னைகளை மக்கள் அடுக்கினாலும் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியல்ரீதியான மோதலே வலுப்பெற்றுள்ளது.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

”அமராவதி ஆறு வறண்டுவிட்டது. மழையே இல்லை. குடிநீருக்கும், ஆடு, மாடுகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயம் செய்யும் நாங்கள், லாரி தண்ணீர் வாங்கி ஊற்றி தென்னையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் குடிதண்ணீர் இணைப்பு இருந்தாலும் தண்ணீரே வருவதில்லை.”

விரக்தியும் வேதனையுமாக பிபிசியிடம் பேசினார், தாராபுரம் ரங்கபாளையத்தைச் சேர்ந்த சின்னாத்தாள்.

”3 சென்ட இடத்தில் 3 குடும்பம் குடியிருக்கிறோம். எங்களுக்கு பட்டா வேண்டும். கொடுப்பதாக இருந்தால் வேறிடத்தில் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே கொடுத்த இடத்தில் எந்த அடிப்படை வசதியுமே இல்லை. அங்கே கொடுப்பதாக இருந்தால் எங்களுக்கு இடமே வேண்டாம்.”

இது பட்டத்திபாளையத்தைச் சேர்ந்த முருகம்மாளின் கோரிக்கை.

இவர்களைப் போலவே, தாராபுரம் தொகுதியெங்கும் பலவிதமான பிரச்னைகளை மக்கள் அடுக்கினாலும் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியல் ரீதியான மோதலே வலுப்பெற்றுள்ளது.

By admin