• Thu. Nov 19th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவிடம் உலகின் மிகச்சிறந்த இளம் திறமையாளர்கள் உள்ளனர்: குடியரசுத் தலைவர் முர்மு

Byadmin

Nov 19, 2026


இந்தியாவிடம் உலகின் மிகச்சிறந்த இளம் திறமையாளர்கள் உள்ளனர் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். ஸ்ரீ ராம் வணிக கல்லூரியை (SRCC) உதாரணமாக குறிப்பிட்ட அவர், முன்னணி கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த கற்றல் மையங்களாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற ஸ்ரீ ராம் வணிக கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய குடியரசு தலைவர் முர்மு, உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றும் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உதவும் என்றும், நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திறமையான மாணவர்களை ஈர்க்கும் என்றும் கூறினார்.

குடியரசு தலைவர் அறிவுறுத்தல்:

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்வதை சுட்டிக்காட்டிய அவர், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் ஸ்டார்ட்-அப் சூழல், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பேசிய குடியரசு தலைவர், உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியிலும் இந்த சாதனைகள் எட்டப்பட்டுள்ளன என்று கூறினார்.

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்புக்கு அதன் இளைஞர்களே உந்துசக்தியாக இருப்பார்கள் என்று கூறிய அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய இளம் மக்கள் தொகையை கொண்டிருப்பதோடு, வலுவான திறமையாளர்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது என்றார்.

இளைஞர்கள் தங்கள் இலட்சியங்களை “இந்தியாவை பற்றியது, இந்தியாவால் உருவாக்கப்பட்டது, இந்தியாவிற்கானது” என்ற அணுகுமுறையுடன் வரையறுக்க வேண்டும் என்றும், அதே வேளையில் சமூகம் மற்றும் நாட்டின் மீது தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் குடியரசு தலைவர் முர்மு அறிவுறுத்தினார்.

அறநெறியுடன் நடக்க வேண்டும்:

மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், செல்வம் படைப்பதன் மூலம் தேசத்தை கட்டமைப்பதிலும், மற்றவர்களுக்கு – குறிப்பாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு – வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பங்களிக்குமாறும், தொழில்முறை சிறப்பை அடையும் அதே வேளையில் அறநெறிகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், தொழில்முறை வெற்றியை பெறுவதுடன், மற்றவர்களிடம் அனுதாபத்துடனும் அறநெறியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பயணத்தில், ஸ்ரீ ராம் வணிக கல்லூரி சமூகம் தொடர்ந்து பங்களிக்கும் என்று குடியரசு தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

By admin