• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் | இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள்

Byadmin

Aug 22, 2026


இந்தியாவுக்கு எதிராக நாளை மறுதினம் (23) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இரண்டு அறிமுக வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்களும் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாதவர்களுமான காமில் மிஷார, சஹான் ஆராச்சிகே ஆகிய இருவரே இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள புதிய வீரர்களாவர்.

ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்கவுக்கு பதிலாக காமில் மிஷாரவும் காயமடைந்த தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக 30 வயதான சஹான் ஆராச்சிகேவும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருமே முதல் பதினொருவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

அணித் தலைவராக தனஞ்சய டி சில்வாவும் உப தலைவராக கமிந்து மெண்டிஸும் தொடர்ந்து செயல்படுவர்.

இலங்கை குழாம் 

லஹிரு உதார, காமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்), தனஞ்சய டி சில்வா (அணித் தலைவர்), சஹான் ஆராச்சிகே, சொனால் தினூஷ, நிரோஷன் திக்வெல்ல, கேஷர நுவன்த, ப்ரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ.

The post இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் | இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள் appeared first on Vanakkam London.

By admin