• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

டாஸ்மாக் கடைகளில் விற்க 11 மது வகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்பட்டது ஏன்?

Byadmin

Aug 22, 2026


11 மதுபானங்களுக்கு தடை ஒரே நாளில் வாபஸ், செயற்கை சுவையூட்டிகளால் என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையில் இருக்கும் ‘என்ரிகா’ நிறுவனத்தின் 11 விதமான மதுபானங்களை விற்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 13 அன்று சுற்றறிக்கை அனுப்பிய டாஸ்மாக் நிர்வாகம், ஒரே நாளில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் இருப்பதாக மத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசுக்கும் இந்த தடைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பிபிசியிடம் விளக்கிய தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், இரண்டுமே மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறை எடுத்த நடவடிக்கை என்றார்.

இதுபற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள், அது விதிமுறைகள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டுமென்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி.

எல்லா நிறுவனங்களும் பயன்படுத்தும் அளவில்தான் தங்களுடைய தயாரிப்புகளிலும் செயற்கை சுவையூட்டி பயன்படுத்தப்படுவதாக என்ரிகா’ நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.

By admin