• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா மீது அமெரிக்கா 100% வரி விதித்தால் என்ன நடக்கும்? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Sep 25, 2026


இந்தியா மீது அமெரிக்கா 100% வரி விதித்தால் என்ன நடக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செப்டம்பர் 16 அன்று, லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் இரான் சட்டத்த்திற்கு 262 க்கு 159 என்ற வாக்குகள் கணக்கில் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க செனட் இந்த மசோதாவை ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிறைவேற்றியது. அதிபர் டொனால்ட் டிரம்ப் அதில் கையெழுத்திட்டார். தற்போது இந்தியா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் உரிமையை டிரம்ப் பெற்றுள்ளார்.

“சீனாவும் இந்தியாவும் தங்கள் அணுகுமுறையை மேம்படுத்தி, வேறு எங்கிருந்தோ எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க வேண்டும்” என்று மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய ஜனநாயகக் கட்சியின் எம்.பி ரிச்சர்ட் புளூமெண்டல் பகிரங்கமாக கூறினார்.

இந்த வரிகளை எப்போது, ​​எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க டிரம்ப்பிற்கு பரந்த அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. இந்தியப் பொருட்களின் அமெரிக்க இறக்குமதிச் செலவை அதிகரிக்கக் கூடிய வரிகளை அவர் எப்போது விதிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சட்டம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களையும் ஆராயும் நேரத்தில், அழுத்தம் கொடுப்பதற்கான டிரம்பின் செல்வாக்கை இது அதிகரிக்கக்கூடும்.

By admin