• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

இன்னும் எத்தனை பேரோட உயிர் போகணும்? | எஸ்.பி.லக்குணா சுஜய்

Byadmin

Jun 25, 2026


இன்னும் எத்தனை பேரோட உயிர் போகணும்
இன்னும் எத்தனை பேரோட வாழ்வு அழியணும்
மொக்குத் தனமாக பைக் ஓட்டணுமா
கஞ்சா போதையால் விபத்து நடக்கணுமா

வேகமாய் பைக் க நீ ஓட்டணுமா
வேகத்தடை பாதையில் இல்லையா
சாலை விதிகளை நீ மதிக்கலையா
சாவை நீ பலவந்தமாய் வாங்கணுமா

இளவயதில் எத்தனை மரணமடா
இறைவன் மேல் என்ன குற்றமடா
இருபது என்பது சாகிற வயசாடா
இருப்பை நீ மண்டையில் ஏத்தடா

சாவுக்கு நாளொன்று குறியடா
சாலையில் பைக் வேகமா ஓட்டடா
நீ சாகவா உன்னை பெத்து போட்டார்கள்
நீ வாழவே உன்னை பெற்றெடுத்தார்கள்

விபத்துக்களால் பாதி உயிர் என்டால்
போதையால் மீதி உயிர் போகுது
இயற்கை மரணமே சிறப்பு
செயற்கை மரணம் பேரிழப்பு

எம்புட்டு சொன்னாலும் புரியாதா
எருமை மாடு குணம் விலகாதா
சாலை விபத்துக்களை தவிர்ப்பீர்
சாவை எழுபதில் தள்ளி வைப்பீர்.

வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்

By admin