• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தை சுற்றி இன்னும் எழும் கேள்விகள்

Byadmin

Jun 25, 2026


அமோனியா வாயு கசிந்த உணவு ஏற்றுமதி நிறுவனம்.
படக்குறிப்பு, அமோனியா வாயு கசிந்த உணவு ஏற்றுமதி நிறுவனம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக, ஜூன் 25 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 11 பேர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பேர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசு கூறியுள்ளது.

“விபத்து நடந்த ஆலையில் கடந்த டிசம்பர் மாதம் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதன்பிறகு முறையாக ஆய்வு நடத்தாததே விபத்துக்குக் காரணம்” என சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் விமர்சித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் என்ற பெயரில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வந்தது.

கடந்த ஞாயிறுன்று (ஜூன் 21) ஆலையில் பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரத்துக்கு செல்லும் பாதையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

By admin