• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் முன்னோட்டம்

Byadmin

Jul 6, 2026


தமிழ் திரையுலகில் திறமையும், நட்சத்திர அந்தஸ்தும் கொண்ட நடிகரான அதர்வா கதையின் நாயகனாக – கல்லூரியில் படிக்கும் மாணவனாக- நடித்திருக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய இயக்குநர் அட்லீ இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி, நட்ராஜ், எஸ். தமன், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் செல்வம் , ஏஞ்சலினா, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹம்சா மற்றும் சி ஹெச் சாய் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் – ஒருதலை காதலின் தீவிரத்தையும், நிலைப்பாட்டையும் இன்றைய காலகட்ட இளைய தலைமுறையினரின் காதல் உணர்வு ஏற்ப வெளிப்படுத்தப்பட்டிருப்பதால்.. ரசிகர்களிடத்தில் படத்தை பார்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எதிரொலிக்கும் வகையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

By admin