9
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து ஒரு அன்பான இன்ப அதிர்ச்சி கிடைத்தது. இந்த அன்பான பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 27-வது திரைப்படமான SK27 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு புத்தம் புதிய iPhone 18 Pro Max செல்போனைப் பரிசாக வழங்கியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கல்லூரிப் பின்னணியில் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘எஸ்கே 27’ உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். மேலும் ‘அடிபொலி’, ‘காகுல் காசா’ போன்ற சுயாதீனப் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் 3 தேசிய விருதுகளை வென்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் திரைப்படம் இதுவாகுமென்பதால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது எனலாம்.